×

வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்: இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: வடஇந்திய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. டெல்லி, உத்தரகாண்ட், இமாசல பிரதேசம், குஜராத், மராட்டியம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. யமுனை ஆற்றில் எற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக டெல்லியின் சாலைகளில் வெள்ளநீர் புகுந்தது.

மேலும் கனமழை காரணமாக, மகாராஷ்டிராவில் ஏற்பட்ட நிலசரிவில் பலர் உயிரிழந்தனர். இந்த நிலையில், வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:
வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதனால் வட மாநிலங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மிக கனமழை தொடரும். ஒடிசா, கோவா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என அதில் கூறபட்டுள்ளது.

The post வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்: இந்திய வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Bangkok Sea ,Indian Meteorological Centre ,Delhi ,North Indian ,Uttarakhand ,Himasal Pradesh ,Gujarat ,Marathium ,Bengal Sea ,Indian Meteorological Centre Information ,
× RELATED தமிழ்நாட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்பு