×

கொள்ளிடம் பகுதியில் கொட்டி தீர்த்த மழை

கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை மேகமூட்டம் இருந்து வந்தது. வானத்தை தொடர்ந்து மேகம் சூழ்ந்திருந்தாலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. கடந்த ஒரு வார காலத்தில் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை 5 மணி முதல் மிதமான மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் வாட்டி வதைத்து வந்த வெப்பம் தணிந்து ஓரளவு குளிர்ச்சியாக காணப்பட்டது. ஆனால் நேற்று மாலை பெய்த மிதமான மழையால் பருத்தி விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. தினந்தோறும் பருத்தி அறுவடை செய்து பஞ்சு மூட்டைகளை வைத்திருப்பவர்கள், பருத்தி பஞ்சின் ஈரப்பதத்தை நினைத்து வருத்தம் அடைந்தனர். காற்றில் ஈரப்பதம் ஏற்படும் போது பருத்தி பஞ்சின் நிறம் மாறுவதால் கொள்முதல் விளையும் குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் மழையால் வழக்கமாக தினந்தோறும் பருத்தி அறுவடை செய்வது நிறுத்தப்பட்டு மேலும் 2 நாட்களுக்குப் பிறகு பருத்தி அறுவடை செய்யும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மழையினால் பருத்தி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

The post கொள்ளிடம் பகுதியில் கொட்டி தீர்த்த மழை appeared first on Dinakaran.

Tags : Kollidam ,Kollidum ,Mayiladuthurai District ,Dinakaran ,
× RELATED கொள்ளிடம் பகுதியில் உளுந்து, பயறு சாகுபடி பரப்பளவு குறைந்தது