×

விழிப்புணர்வு பேரணி

 

மதுராந்தகம்: கண்தானம், நீரிழிவு நோய் சுற்றுச்சூழலை பாதுகாப்பது ஆகியவை குறித்தும் விழிப்புணர்வு ஊர்வலம் அச்சரப்பாக்கம் நகரின் முக்கிய வதிகளில் நேற்று முன்தினம் நடைபெற்றது. செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த லயன்ஸ் சங்கங்கள் சார்பில், லயன்ஸ் ஆண்டின் தொடக்கத்தையொட்டி நடந்த பேரணிக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மேலும், மாவட்ட ஆளுநர் மதியழகன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கிவைத்தார். நூற்றுக்கும் மேற்பட்டோர் பதாகைகளை ஏந்தியபடி விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

The post விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Madhurandakam ,Acharappakkam ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப்...