×

10 அழகிய கிராமங்களில் கொல்லங்கோடு தேர்வு- அதிகாரிகள் ஆய்வு செய்தனர்

பாலக்காடு: இந்தியாவில் பத்து அழகிய கிராமங்களில் ஒன்றாக கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு கிராமப்பஞ்சாயத்து பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது. கேரள-தமிழக எல்லையான பொள்ளாச்சி அருகே உள்ள கோவிந்தாபும், மீனாட்சிபுரம் ஆகிய இடங்களிலிருந்து 15 கிமீ தொலைவில் இந்த பகுதி உள்ளது. இவ்விடங்களை எம்எல்ஏ பாபு, கொல்லங்கோடு கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் சத்யபால், மாவட்ட கலெக்டர் டாக்டர் சித்ரா, சித்தூர் தாசில்தார் முகமது ராபி, மாவட்ட சுற்றுலா மேம்பாட்டுக்கழக செயலாளர் சில்பர்ட்ஜோஸ், ஆகியோர் கொல்லங்கோடு கிராமம் இயற்கைச்சூழ்ந்தப் பகுதிகளை பார்வையிட்டனர்.

பச்சைப்பசேலென பரந்து விரிந்துக்கிடக்கும் வயல் வரப்புகள், மலைப்பகுதிகள், மலையருவிகள் ஆகியவற்றை அனைத்துத்தரப்பு உயர் அதிகாரிகளும் ஆய்வு நடத்தினர். இந்த கிராமத்தை சுற்றுல தலமாக மாற்றியமைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதற்கான ஆலோசனை கூட்டம் கொல்லங்கோடு கிராமப்பஞ்சாயத்து கலையரங்கில் வரும் 27ம்தேதி நடைபெறவுள்ளது. இதன் அருகே காச்சாம்குறிச்சி பெருமாள் கோவில், கொல்லங்கோடு ராஜா அரண்மனை, நெம்மாரர நெல்லிக்குளங்கரை அம்மன் கோவில், போத்துண்டி அணை, மலை அருவிகள், நெல்லியாம்பதி ஐயப்பன் கோவில் போத்துண்டி அணை காட்சிமுனைகள், கைக்காட்டி, அரசினர் ஆரஞ்சுத்தோட்டம், டீ, காப்பி, ரப்பர் எஸ்டேட் மற்றும் வனவிலங்குகளின் நடமாட்டம் ஆகியவை பார்த்து ரசித்து செல்லுகின்ற இடமாக அமைந்துள்ளது.

The post 10 அழகிய கிராமங்களில் கொல்லங்கோடு தேர்வு- அதிகாரிகள் ஆய்வு செய்தனர் appeared first on Dinakaran.

Tags : Kollangkodu ,Palakkad ,Kerala State ,Palakkad District ,India ,Kollankothi Exam ,Dinakaran ,
× RELATED பாலக்காடு மாவட்டத்தில் கடும் வெயில்...