×

வங்கதேசத்தில் பேருந்து குளத்தில் கவிழ்ந்து 17 பேர் உயிரிழப்பு: 35 பேர் காயம்

பங்களாதேஷ்: பங்களாதேஷின் ஜலகதி சதர் உபாஸிலாவின் சத்ரகண்டா பகுதியில் நேற்று பேருந்து ஒன்று சாலையோர குளத்தில் விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர் மற்றும் 35 பேர் காயமடைந்தனர். பலியானவர்களில் ஏழு சிறார்களும் ஐந்து பெண்களும் அடங்குவர்.பண்டாரியா உபாசிலாவிலிருந்து பைரோஜ்பூருக்கு பரிஷால் நோக்கிச் சென்ற பேருந்து, உள்ளூர் யூனியன் பரிஷத் அலுவலகம் அருகே காலை 9.55 மணியளவில் ஆட்டோ ரிக்‌ஷாவிற்கு சைட் கொடுக்கும் போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால் குளத்தில் விழுந்ததாக ஜலகதி சதர் காவல் நிலைய பொறுப்பதிகாரி நசீர் உதின் தெரிவித்தார்.

நேற்று ஜலகதி சதர் உபாசிலாவின் கீழ் வங்காளதேசத்தின் சத்ரகண்டா பகுதியில் உள்ள குளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் மூன்று குழந்தைகள் உட்பட குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர். 35 பேர் காயமடைந்தனர். ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என உயிர் பிழைத்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், பேருந்தில் அதிக பயணிகளை ஏற்றிச் சென்றதே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

“அனைத்து பயணிகளும் பேருந்திற்குள் சிக்கிக்கொண்டனர். அதிக பாரம் ஏற்றப்பட்டதால், பேருந்து உடனடியாக நீரில் மூழ்கியது. 17 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மீதமுள்ள காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பரிஷால் பிரதேச ஆணையர் எம்.டி ஷவ்கத் அலி உறுதிப்படுத்தியுள்ளார். பலியானவர்களில் பெரும்பாலானோர் பிரோஜ்பூரின் பண்டாரியா உபாசிலா மற்றும் ஜல்கதியின் ராஜ்பூர் பகுதியில் வசிப்பவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

The post வங்கதேசத்தில் பேருந்து குளத்தில் கவிழ்ந்து 17 பேர் உயிரிழப்பு: 35 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,Chatrakanda ,Jalagati Sadar Ubasilah, Bangladesh ,
× RELATED வங்கதேச பெண்ணின் முழங்காலில் கட்டி அகற்றம்: காவேரி மருத்துவமனை அசத்தல்