×

4வது குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு

 

திருப்பூர், ஜூலை 23: திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதன் காரணமாக தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக மாநகராட்சி பகுதி இருந்து வருகிறது. இதுபோல் வேலை தேடி திருப்பூருக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பலர் வருவதால், மக்கள் தொகை நெருக்கம் அதிகமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 4வது குடிநீர் திட்ட பணிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் வழங்குவது குறித்து திருப்பூர் ஜிஎன் கார்டன் பகுதியில் நேற்று மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் ஆய்வு செய்தார். இதில் துணை மேயர் பாலசுப்பிரமணியம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

The post 4வது குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Dinakaran ,
× RELATED மாநகராட்சிக்கு வரி செலுத்தாத பிரபல ஓட்டல் கட்டிடத்திற்கு சீல்