×

க.பரமத்தியில் ஆசிரியர்களுக்கு குறு வள மைய பயிற்சி அளிப்பு

க.பரமத்தி, ஜூலை 23: க.பரமத்தியில் 4ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு குறு வள மைய பயிற்சி நடைபெற்றது. க.பரமத்தி ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் முதன்மை கல்வி அலுவலரின் வழிகாட்டுதலின்படிநான்காம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கான குறுவள மைய பயிற்சி க.பரமத்தி அரசு மேல்நிலைப்பள்ளி நேற்று நடைபெற்றது. பயிற்சி தொடக்க விழாவிற்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) அறிவழகன் வரவேற்றார். க.பரமத்தி வட்டார கல்வி அலுவலர் சித்ரா தலைமை வகித்து தொடங்கி வைத்து பார்வையிட்டார். பள்ளிகளில் மாணவர்களுக்கு ஏற்படும் உடல் நலம் மனநலம் குறித்து மாணவர்களுக்கு ஏற்படும் மன மாற்றம் மற்றும் அதற்கான தீர்வுகள் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்தும், பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது பற்றி பயிற்சியில் பங்கேற்ற 98 ஆசிரியர், ஆசிரியைகளுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இப்பயிற்சியின் கருத்தாளர்களாக இடைநிலை ஆசிரியர்கள் பத்மாவதி, தமிழரசி, குமார், சந்துரு, ரமேஷ், பாலுசாமி, சக்திவடிவேல் ஆகியோர் செயல்பட்டனர். பயிற்சிக்கு தேவையான ஏற்பாடுகளை வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

The post க.பரமத்தியில் ஆசிரியர்களுக்கு குறு வள மைய பயிற்சி அளிப்பு appeared first on Dinakaran.

Tags : K. Paramathi ,K. ,Paramathi ,Dinakaran ,
× RELATED கரூர் கொங்கு கல்லூரியில் பொங்கல் தின விழா