×

கீழையூர் கிழக்கு ஒன்றியத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

கீழ்வேளூர்,ஜூலை 23: கீழையூர் கிழக்கு ஒன்றியத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூண்டி கீழப்பிடாகை சிந்தாமணியில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமஸ்ஆல்வா எடிசன் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதி ஞானசேகரன் வரவேற்றார். வேளாங்கண்ணி பேரூர் செயலாளர் மரியசார்லஸ், ஒன்றிய அவைத்தலைவர் சுப்பிரமணியன், ஒன்றிய துணை செயலாளர்கள் அருள்செந்தில், ரவிச்சந்திரன், அனுசியா, ஒன்றிய பொருளாளர் பூவைமுருகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நாகை மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கவுதமன், தாட்கோ தலைவர் மதிவாணன், தலைமை கழக பேச்சாளர்கள கந்திலி கரிகாலன், நாகை நாகராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் மேகநாதன், மாநில மீனவர் அணி துணைச் மனோகரன், பொதுக்குழு உறுப்பினர் சார்லஸ், மாவட்ட பிரதிநிதிகள் இளம்பரிதி, மாரிமுது, நரசிம்மன், ஒன்றியக்குழு தலைவர் செல்வராணி ஞானசேகரன், துணை தலைவர் சவுரிராஜன், மாவட்ட குழு உறுப்பினர் கவுசல்யா இளம்பரிதி, மாவட்ட சார்பு அணி துணை அமைப்பாளர்கள் ஆனந்த கைலாசம், ரெக்ஸ், டேனியல் சத்தியா, ராம்குமார், ஜோதிபாசு விஜயகுமாரி, சரண்யா மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post கீழையூர் கிழக்கு ஒன்றியத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Artist Centenary General Meeting ,Geelyur East Union ,Keelvelur ,Artist Centenary Celebration Public Meeting ,Keelvelur East Union ,Nagapattinam District ,Keehoyur ,East Union ,Dinakaran ,
× RELATED பண்ருட்டி பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்