×

உக்ரைனில் ரஷ்யா தாக்குதல்: 8 பேர் பலி

கிவ்: உக்ரைனின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 8 பேர் பலியாகினர். உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான ஒடெசா துறைமுகம் மீது ஏவுகணை, ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்களை நடத்தி வருகிறது. கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் நடந்த தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

பாக்முட் நகரின் தெற்கில் உள்ள நியுயோர்க் குடியிருப்பு பகுதியில் வெடிகுண்டுகளை வீசி ரஷ்யா நடத்திய தாக்குதலில் புதுமண தம்பதி உள்பட 4 பேர் பலியாகினர். வடக்கு உக்ரைனின் செர்னிஹிவ் அருகே நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர்.

The post உக்ரைனில் ரஷ்யா தாக்குதல்: 8 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Russia attack in Ukraine ,Kyiv ,Russia ,southern and eastern parts ,Ukraine ,in Ukraine ,Dinakaran ,
× RELATED உக்ரைனின் கார்கிவ் நகரில் அமைந்த முதல் ‘பங்கர் பள்ளி