×

தெலுங்கானா சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் மீன்களை பிடிக்க மக்கள் போட்டா போட்டி..!!

தெலுங்கானா: தெலுங்கானாவில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து சாலைகளில் குதித்து வரும் மீன்களை பிடிக்க பொதுமக்கள் குவிந்துள்ளனர். மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கோதாவரி ஆற்றில் கடும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக அனைத்து நீர்த்தேக்கங்கள் நிரம்பி ஏரி, குளம், குட்டைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.

இதன் காரணமாக கரீம் நகரில் உள்ள ஒரு பகுதியில் ஓடைகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் செல்கிறது. வெள்ளநீருடன் 10 முதல் 15 கிலோ எடைகொண்ட மீன்களும் அடித்து வரப்படுகிறது. இந்த மீன்களை பிடிப்பதற்காக அப்பகுதியில் உள்ள கிராமமக்கள் அனைவரும் சூழ்துள்ள நிலையில் ஒவ்வொருவரும் வலைகளை வைத்து மீன்களை பிடித்து செல்கின்றனர். அவ்வாறு பிடிக்கக்கூடிய மீன்களை வலையில் பிடித்து செல்ல முயன்றாலும் மீனின் எடை தாங்க முடியாமல் வலையோடு அடித்து செல்ல கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

மீன்களை எடுத்து செல்வதற்காக ஆட்டோக்கள் வரவழைக்கப்பட்டு கொண்டு செல்லும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் அதிக மீன்கள் கிடைப்பதன் காரணமாக மீன் வியாபாரிகளும் பகுதிக்கு வந்து பொதுமக்கள் பிடித்து கொடுக்கக்கூடிய மீன்களை வாங்கி செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் மழை மற்றும் குளிர் அதிகரித்து காணப்பட்டநிலையில் மீன்பிடிக்கக் கூடிய பொதுமக்கள் என அணைத்து வீடுகளிலும் மீன்குழம்பு வைத்து சமைத்து சாப்பிடக்கூடிய நிலை அந்த பகுதி முழுவதும் ஏற்பட்டுள்ளது.

மீன்கள் அதிகம் பிடிப்பதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள சுற்று வட்டார கிராம மக்கள் அங்கு குவிந்து வருகின்றனர். இதே போன்று தெலுங்கானா மாநிலம் முழுவதும் தாழ்வான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்த பகுதியில் பொதுமக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் மாநகராட்சி அதிகாரிகளும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே மழை அதிகளவில் இருக்கும் என வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்த நிலையில் நேற்று மற்றும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

The post தெலுங்கானா சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் மீன்களை பிடிக்க மக்கள் போட்டா போட்டி..!! appeared first on Dinakaran.

Tags : Telangana ,
× RELATED தெலங்கானாவில் நள்ளிரவில் தேசிய...