×

மாணவியை ஈவ்டீசிங் செய்ததை தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல்

 

ராசிபுரம், ஜூலை 22: ராசிபுரம் அருகே, மாணவியை ஈவ்டீசிங் செய்ததை தட்டிக் கேட்ட வாலிபரை தாக்கிய விவகாரத்தில், 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேடி வருகின்றனர். ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் அருகே நடுப்பட்டியைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு, கடந்த 5 நாட்களுக்கு முன், மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் ராசிபுரம், அரூர் பகுதியை சேர்ந்த உறவினர்கள் கலந்து கொண்டனர். அப்போது, பிளஸ்2 படிக்கும் மாணவி ஒருவரை, நிகழ்ச்சிக்கு வந்த வாலிபர் ஒருவர் ஈவ்டீசிங் செய்து, தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். இது குறித்து, மாணவியின் சகோதரர் லோகேஸ்வரன் தட்டிக் கேட்ட போது, இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. அப்போது, லோகேஸ்வரனை, அரூரைச் சேர்ந்த இளைஞர்கள் 5 பேர், கடுமையாக தாக்கி உள்ளனர்.

இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனை பார்த்த மாணவி, வீட்டிற்கு சென்று விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். குடும்பத்தினர் அவரை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, மாணவியின் பெற்றோர் வெண்ணந்தூர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில், அரூர் நடுப்பட்டியைச் சேர்ந்த அருணாச்சலம், ஜோதிமணி, அரூரைச் சேர்ந்த சதீஷ், பிரபு, விஜய் உள்ளிட்ட 5பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவர்களை தேடி வருகின்றனர்.

The post மாணவியை ஈவ்டீசிங் செய்ததை தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Rashipuram ,
× RELATED நாமக்கலில் சிறுமிகளுக்கு பாலியல்...