×

காற்றில் பரவிய தீயால் விபரீதம் போதைப்பொருட்களால் ஏற்படும் விளைவுகள் மாணவ, மாணவிகளுக்கு எஸ்பி விழிப்புணர்வு

 

பெரம்பலூர், ஜூலை. 22: பள்ளி மாணவ, மாணவிகளிடம் போதைப்பொருட்கள் உபயோகிப்பதனால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை பெரம்பலூர் எஸ்பி ஷ்யாம்ளாதேவி ஏற்படுத்தினார். பெரம்பலூர் எஸ்பி ஷ்யாம்ளாதேவி உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் நேற்று மாணவர்களுக்கான விழிப்புணர்வு திட்டமான,\”கல்வியும் காவலும்\” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது, வேப்பந்தட்டை தாலுக்கா, மங்கள மேடு காவல்நிலையத்தில் எஸ்பி ஷ்யாம்ளாதேவி தலைமையிலும் மற்ற காவல் நிலையங்களில் டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் நிலைய பொறுப்பு அதிகாரிகளின் தலைமையிலும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு காவல்துறையில் இயங்கும் விரல்ரேகை பிரிவு, மோப்பநாய்ப்படை பிரிவு, வெடிகுண்டு தடுப்பு பிரிவு, சைபர் குற்றங்கள் தடுப்பு பிரிவு மற்றும் காவல்துறையில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் குறித்து வகுப்புகள் எடுக்கப்பட்டது.

மங்களமேடு காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய எஸ்பி ஷ்யாம்ளாதேவி மாணவ, மாணவிகளிடம் போதைப்பொருட்கள் உபயோகிப்பதனால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வுகள், போக்குவரத்து விதிகளை பின்பற்றுதல் ஏரி, குளம், ஆறு, போன்றவைகளில் குளிக்க செல்வதால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் தற்கொலைகள் போன்றவை குறித்தும் மாணவ, மாணவிகளிடம் இன்றைய மாணவர்களே நாளைய அதிகாரிகள் என்று கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார். மேலும் மாணவிகளிடம் பெண்கள் கல்வி கற்பதன் அவசியம் குறித்தும் இந்த உலகத்தில் பெண்கள் பணிபுரியாத துறைகளே இல்லை, அவற்றில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் ஒவ்வொருவரும் சாதித்து வருகிறார்கள் என்று பெண் கல்வி குறித்தும் எடுத்துரைத்தார். இந்த கல்வியும் காவலும் திட்டம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று காவல் நிலையங்களுக்கு மாணவர்களை அழைத்து இதுபோல விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

 

The post காற்றில் பரவிய தீயால் விபரீதம் போதைப்பொருட்களால் ஏற்படும் விளைவுகள் மாணவ, மாணவிகளுக்கு எஸ்பி விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Perambalur ,
× RELATED குழந்தை திருமணம் செய்து வைத்தால்...