×

விவசாயியை மிரட்டிய வாலிபருக்கு வலை

களக்காடு, ஜூலை 22: களக்காடு அருகே உள்ள கடம்போடுவாழ்வு தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தேவேந்திரன் மகன் முத்துக்குமார் (33). விவசாயியான இவர் சம்பவத்தன்று கடம்போடுவாழ்வில் உள்ள சுந்தராச்சிஅம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த சுப்பையா மகன் அழகியநம்பி (33), முத்துக்குமாரை பார்த்து கோயிலுக்கு வரி தர மாட்டியா என்றும், வீரவநல்லூர் போலீசில் என் மீது திருட்டு வழக்கு கொடுத்தது நீதானே என கேட்டும் தகராறில் ஈடுபட்டார். மேலும் அவரை அவதூறாக பேசி, கொலை மிரட்டலும் விடுத்தார். இதுகுறித்து அவர் களக்காடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் வழக்குப்பதிவு செய்து அழகியநம்பியை தேடி வருகிறார்.

 

The post விவசாயியை மிரட்டிய வாலிபருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Kalakadu ,Muthukumar ,Devendran ,Kadamboduhaiwa South Street ,
× RELATED அறுவடை சீசன் தொடங்கியுள்ளதால்...