×

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர்சந்தையில் பூக்களின் விலை உயர்வு

குமரி: ஆடி வெள்ளிக்கிழமை மற்றும் ஆடிப்பூரம் பண்டிகையின் எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர்சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. ஆடி மாதத்தில் கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

குமரி மாவட்ட தோவாளை மலர்சந்தை, தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான மலர்சந்தைகளில் ஒன்றாகும். இந்த மலர்சந்தையில் கேரளா மற்றும் தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இருந்து ஏராளமான சிறு வியாபாரிகள் போக்களை பெற்று தங்களின் வியாபாரங்களை பெருக்கி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ஆடி வெள்ளிக்கிழமை என்பதால் பூக்களின் தேவை அதிகரித்ததன் காரணமாக பூக்களின் விலை சற்று உயர்ந்துள்ளது. பிச்சிப்பூ நேற்று ரூ.250 விற்கப்பட்ட நிலையில், ரூ.150 அதிகரித்து ரூ.400க்கும், ரூ.200 க்கு விற்கப்பட்ட மல்லிப்பூ ரூ.300 அதிகரித்து ரூ.500க்கு விற்கப்படுகிறது.

இந்த பூக்களை தவிர மற்ற பூக்களான சம்பங்கி, வாடாமல்லி, துளசி, தாமரை, ரோஜா உள்ளிட்ட பூக்களின் விலை நேற்றைய விலையில் மாற்றம் செய்யப்படும் அதே விலையில் இன்றும் விற்கப்படுகிறது. இது ஆடி மாதம் என்பதால் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் பூக்களின் விலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

The post கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர்சந்தையில் பூக்களின் விலை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Dovalai ,Kanyakumari district ,KUMARI ,Dovalai flower market ,Aadi Friday ,Aadipuram festival ,
× RELATED குமரியில் தொடர் மழை: வீடுகளுக்குள் மக்கள் முடக்கம்