×

நிலக்கோட்டை ஒன்றிய பகுதியில் ரூ.1.27 கோடி மதிப்பில் சாலை பணி துவக்கம்

நிலக்கோட்டை, ஜூலை 21: நிலக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஜம்புத்துரைக்கோட்டை, மாலையகவுண்டன்பட்டி, கோட்டூர் ஆகிய ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் தமிழக முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.27 கோடி மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் சவுந்தரபாண்டியன் தலைமை வகித்து சாலை பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பவுன்தாய் காட்டுராஜா, துணை தலைவர் சிவராமன், ஒன்றிய கவுன்சிலர் ரூபி ஷகீலா, பேரூராட்சி தலைவர் செல்வராஜ், ஒன்றிய துணை செயலாளர்கள் வெள்ளைச்சாமி, ராஜாங்கம், மாவட்ட பிரதிநிதி தெய்வேந்திரன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆரோக்கியம், கட்சி பிரமுகர்கள் காட்டுராஜா, அழகேசன், பெனிட், பதினெட்டாம்படி, கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post நிலக்கோட்டை ஒன்றிய பகுதியில் ரூ.1.27 கோடி மதிப்பில் சாலை பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Nalakkotta Union ,Nalakotta ,Chief Minister ,Tamil ,Nadu ,Jumbutrakotta ,Malaiyagundanbatti ,Kottur ,Nalakotta Union ,Dinakaran ,
× RELATED ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள்...