×

மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் பெற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

 

திண்டுக்கல், ஜூலை 21: திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்ததாவது: தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண நிதியுதவி வழங்கும் திட்டம், பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டம், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, சிறு மற்றும் குறுந்தொழில் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக்கடன் மானியம் ஆகிய திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் இதுநாள் வரை நேரில் அல்லது அஞ்சல் மூலம் பெறப்பட்டு வந்தது.

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவிக்கப்பட்ட 5 திட்டங்களுக்கும், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்கள் இருப்பிட்டத்திற்கு அருகாமையில் உள்ள இ.சேவை மையங்கள் மூலம் அல்லது இ.சேவை மையங்கள் அல்லது https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணையதளம் வாயிலாக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் பெற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Dindigul District ,Collector ,Boongodi ,Tamil Nadu Government ,Disabled Persons Welfare Department ,
× RELATED திண்டுக்கல் பூதிபுரம் ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு