×

சிம்ஸ் பூங்கா விற்பனை நிலையத்தில் தக்காளி விற்பனை அமோகம்

 

குன்னூர், ஜூலை 21: நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக தக்காளி விலை உச்சத்தில் உள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தக்காளி விலையை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தோட்டக்கலைத்துறையின் கீழ் இயங்கும் டான்ஹோடா விற்பனை நிலையத்தின் மூலமாக தக்காளி விற்பனை கடந்த 13ம் தேதியில் முதல் நடந்து வருகிறது. மொத்த விலைக்கு தக்காளியை வாங்கி அதனை அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை பொதுமக்கள் அதிகளவு வாங்கி செல்கின்றனர். நேற்று குன்னூரில் தக்காளி கிலோ ரூ.120க்கு விற்பனையான நிலையில், சிம்ஸ்பார்க் விற்பனை நிலையத்தில் ரூ.92க்கு விற்பனையானது.

The post சிம்ஸ் பூங்கா விற்பனை நிலையத்தில் தக்காளி விற்பனை அமோகம் appeared first on Dinakaran.

Tags : Sims ,Park ,Outlets ,Coonoor ,Sims Park ,Dinakaran ,
× RELATED ஊட்டி அருகே தேயிலை பூங்காவை பார்த்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்