×

சில்வார்பட்டியில் மகளிர் உரிமைத்தொகை டோக்கன் விநியோகம்: கலெக்டர் ஆய்வு

 

தேவதானப்பட்டி, ஜூலை 21: சில்வார்பட்டியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை டோக்கன் வழங்கும் பகுதியில் கலெக்டர் ஆய்வு செய்தார். தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் டோக்கன் பெரியகுளம் டிஎஸ்ஓ, கார்த்திக் மற்றும் ரேசன் கடை விற்பனையாளர் சின்ராஜ் ஆகியோர் ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கினர். அப்போது மாவட்ட கலெக்டர் ஷஜீவனா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் டோக்கன் முறையாக ரேசன் அட்டை தாரர்களுக்கு வழங்கப்படுகிறதா எனவும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவது குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எடுத்துக்கூறினார். பெரியகுளம் தாசில்தார் அர்ச்சுணன், சில்வார்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் பரமசிவம், மண்டல துணை வட்டாட்சியர் ராஜாராம், ஆர்.ஐ.,கனகமணி, பிடிஓ விஜயமாலா, விஏஓ, மாயகிருஷ்ணன் உடனிருந்தனர்.

The post சில்வார்பட்டியில் மகளிர் உரிமைத்தொகை டோக்கன் விநியோகம்: கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Silwarpatti ,Devadanapatti ,Devadanapatti… ,Dinakaran ,
× RELATED தேவதானப்பட்டி அருகே விளைநிலங்களுக்கு செல்ல சாலை அமைக்க கோரிக்கை