×

உணவுப்பிரியர்கள் விரும்பும் லைவ் கிச்சன்

உடலும், மனமும் சீராக செயல்படுவதும், ஆரோக்கியமாக இருப்பதும் நாம் சாப்பிடும் உணவைப் பொறுத்துதான் இருக்கிறது. அத்தகைய உணவு சுகாதாரமாக இருப்பது மிகவும் முக்கியம். நாம் சாலையில் நடந்து செல்லும்போது பிரியாணி கடைகளில், பிரியாணி வைத்திருக்கும் அண்டாவை தட்டித் தட்டி வாடிக்கையாளர்களுக்கு சாப்பாடு போடுவதைப் கேட்டிருப்போம். நடைபாதை உணவகங்களில் பாஸ்ட் புட்டுகள் தயார் செய்யும்போதும் இதுபோல் சத்தம் எழுப்புவதைப் பார்த்திருப்போம். இந்த விசயங்கள் அனைத்தும் நமக்கு அந்த உணவை சாப்பிடத் தூண்டும். அந்தக் கடைகளுக்கு போயே ஆக வேண்டும் என நினைப்போம். இதனையே தற்போது பெரிய உணவகங்களும் புதிய முறையில் செய்து வருகின்றன. அதுதான் ‘‘லைவ் கிச்சன்” கான்செப்ட். இந்த முறையில், உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் முன்பே அவர்கள் விரும்பும் உணவினை தயார் செய்து கொடுப்பது, அவர்களுக்கு சிறப்பாக பரிமாறுவது என அசத்தி வருகிறார்கள்.

லைவ் கிச்சனில், வாடிக்கையாளர்கள் அமரும் டைனிங் டேபிளில் நெருப்புக் கங்குகள் கொண்ட அடுப்பினை வைப்பார்கள். அதில் வாடிக்கையாளர்கள் கேட்கும் உணவினை அவர்கள் முன்பே தயார் செய்து கொடுப்பார்கள். இவ்வாறு தயார் செய்யப்படும் உணவில் என்னென்ன மசாலா பொருட்கள் சேர்க்கப்படுகிறது? அவர்கள் உண்ணும் உணவினை எவ்வாறு சமைக்கிறார்கள்? என்பதை வாடிக்கையாளர்கள் தெளிவாக தெரிந்துகொள்ள முடியும். தற்போது இந்தியா, சீனா, கொரியன் போன்ற பல்வேறு குசைன்களில் லைவ் கிச்சன் முறையில் உணவுகள் தயார் செய்து கொடுக்கப்படுகிறது. சமையல் செய்யும் குக்குகள் எப்படி உணவு தயார் செய்யப்படுகிறது? என்பதை வாடிக்கையாளர்களிடம் சொல்லிக்கொண்டே உணவினை தயார் செய்வார்கள். இது கஸ்டமர்ஸ்க்கு உணவினை சாப்பிடத் தூண்டும். அதேபோல் அவர்களின் மேனரிசம், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக இருக்கும்.

லைவ் கிச்சனில் இருந்தால் சமைப்பவர்கள் ஹெட் கேப், கிளவுஸ் அணிந்து உணவினை சுத்தமாக தயார் செய்கிறார்களா? என்று தெரிந்துகொள்ள முடியும். வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு… இதுபோன்ற உணவகங்களுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் உணவகங்களின் சுகாதாரத்தை சில விஷயங்களை வைத்து எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். நாம் அமரும் டைனிங் டேபிளை ஒழுங்காக சுத்தம் செய்திருக்கிறார்களா? ஆங்காங்கே அழுக்குகள் இருக்கிறதா? உணவு பரிமாறும் தட்டு சுத்தமாக இருக்கிறதா? டேபிளில் வைக்கும் தண்ணீர் சுத்தமாக இருக்கிறதா? அதேபோல் உணவு பரிமாறுபவர்கள் சுத்தமான உடை அணிந்திருக்கிறார்களா? என்பதைப் பொறுத்து அந்த உணவகத்தின் சுகாதாரத்தை எளிதாகக் கணித்துவிடலாம்.

தொகுப்பு: சுரேந்திரன்

The post உணவுப்பிரியர்கள் விரும்பும் லைவ் கிச்சன் appeared first on Dinakaran.

Tags : Live ,
× RELATED தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்