×

ஹோண்டா டியோ 125

ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் நிறுவனம், புதிய டியோ 125 மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. ஸ்டாண்டர்டு மற்றும் ஸ்மார்ட் என 2 வேரியண்ட்களில் கிடைக்கும். ஷோரூம் விலையாக ஸ்டாண்டர்டு வேரியண்ட் சுமார் ரூ.83,400 எனவும், ஸ்மார்ட் சுமார் ரூ.91,300 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ள 125 சிசி இன்ஜின், அதிகபட்சமாக 8.3 எச்பி பவரையும் 10.4 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

முன்புறம் டிஸ்க் பிரேக், புதிய கிராபிக் டிசைன்கள், ஸ்போர்ட்டியான தோற்றம் என அசத்தலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் வேரியண்ட்டில் வாகனம் இருக்கும் இடத்தை கண்டறியும் வசதி, ஸ்டார்ட் ஸ்மார்ட் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஸ்மார்ட் கீ மூலம் சைடு லாக், பெட்ரோல் டேங்க்கை திறப்பது போன்றவற்றை மேற்கொள்ள முடியும். 7 வண்ணங்களில் கிடைக்கும்.

The post ஹோண்டா டியோ 125 appeared first on Dinakaran.

Tags : Honda ,Honda Motorcycle and ,Scooter Company ,Dinakaran ,
× RELATED ராயபுரம் பகுதியில் உரிய ஆவணமில்லாத 60...