×

தொடர் மழையால் திம்பம் மலைப்பகுதியில் தோன்றிய அருவிகளில் கொட்டும் தண்ணீர்

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் திம்பம் மலை உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1140 மீட்டர் உயரமுள்ள இந்த திம்பம் மலை உச்சியில் ஊட்டியில் உள்ளது போன்ற குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்படும். சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் திம்பம் மலைப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய மலைப்பாதை அமைந்துள்ளது. திம்பம் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இதன்காரணமாக காய்ந்துகிடந்த வனப்பகுதி பச்சை பசேலென மாறி அழகாக காட்சி அளிக்கிறது.

இந்நிலையில், நேற்று மதியம் திம்பம் மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் அப்பகுதியில் புதிய அருவிகள் தோன்றி உள்ளன. இந்த அருவியில் மழைநீர் கொட்டும் காட்சி பார்ப்போரின் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அமைந்துள்ளது. திம்பம் மலை உச்சியில் சாலையோரத்தில் பாறைகளை தழுவியபடி அருவியில் கொட்டும் தண்ணீரை வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிப்பதோடு செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

Tags : hills ,
× RELATED வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும்...