×

ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

சேலம்,: ஏற்காட்டில் குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. நேற்று குடும்பத்தினருடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்தனர். மேலும், அண்ணா பூங்கா, ரோஜா தோட்டடம், பக்டோ பாயிண்ட், மான் பூங்கா, லேடீஸ் சீட் போன்ற இடங்களில் குடும்பத்தினருடன் சென்று அலங்கார மலர்களை கண்டு ரசித்தும், போட்டோ எடுத்தும் மகிழ்ந்தனர்.

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுகிழமையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். மாலையில் குளிர்ந்த காற்றும், பனிப்பொழிவும் நிலவுவதால், சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

Tags : tourist arrivals ,Yercaud ,
× RELATED ஒரே நாளில் சவரன் ரூ.424 அதிகரிப்பு