×

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுவிப்பு: விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் கே.கே.எஸ். .எஸ்.ஆர்.ராமச்சந்திரனை வழக்கில் இருந்து விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியின்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.

கடந்த 2012ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, அமைச்சரின் உதவியாளர் செண்பகமூர்த்தி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையால் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்க கோரி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் இந்த வழக்கில் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி நீதிபதி கிறிஸ்டோபர் முன்னிலையில் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் நேரில் ஆஜரானார்.

மேலும் கடந்த டிசம்பர் 22ம் தேதியும் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எங்கள் மீது அவதூறு பரப்பும் வகையில் வழக்கு தொடரப்பட்டது எனவும் தன் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை எனவும் அமைச்சர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதனிடையே இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி வழக்கை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு கடந்த ஜூன் 27ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஜூலை 20ம் தேதிக்கு (இன்றைக்கு) ஒத்தி வைக்கப்பட்டது. இன்று இவ்வழக்கில் தீர்ப்பளித்த விருதுநகர் மாவட்ட நீதிமன்றம், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், 3 பேரை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது.

The post சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுவிப்பு: விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister ,K. K.K. S.S. S. R.R. Ramachandran ,Virudunagar District Court ,Chennai ,K. K.K. S.S. S. R.R. Srivillyputtur ,Ramachandrana ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...