×

கழிவுநீரை வெளியேற்றிய 4 சாயச்சாலைகளுக்கு சீல்

 

பள்ளிபாளையம்,ஜூலை 20: பள்ளிபாளையம் அருகே ஓடை மற்றும் சாக்கடை வழியாக கழிவுநீரை வெளியேற்றிய 4 சாயச்சாலைகளுக்கு சீல் வைத்த மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், மின் இணைப்பை துண்டித்து நடவடிக்கை எடுத்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்துள்ள களியனூர் பகுதியில் அனுமதி பெற்ற சாயச்சாலைகளில் இருந்து, சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவுநீர் வெளியேறி, ஓடை வழியாக காவிரி ஆற்றில் கலந்து மாசுபடுத்துவதாக குமாரபாளையம் சுற்றுச்சூழல் பொறியாளர் மணிவண்ணனுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து உதவி பொறியாளர்கள் சந்தானகிருஷ்ணன், உதயன் ஆகியோருடன் புகார் செய்யப்பட்ட 4 சாயச்சாலைகளை மணிவண்ணன் நேற்று சோதனை ஈடுபட்டார்.

இதில் 4 சாயச்சாலைகளிலும் கழிவுநீரை சுத்தப்படுத்தி பயன்படுத்தாமல், சாக்கடை ஓடைகள் வழியாக வெளியேற்றி காவிரி ஆற்றை மாசுபடுத்துவது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, 4 சாயச்சாலைகளின் மின் இணைப்பை துண்டிக்கும்படி மின்வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டது. மின்வாரிய பணியாளர்கள் இணைப்பை துண்டித்த பின்னர், சாயச்சாலைகளில் இயங்கிய இயந்திரங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இறுதியாக சாயச்சாலைகளை பூட்டி கதவுகளை அதிகாரிகள் சீலிட்டனர்.

The post கழிவுநீரை வெளியேற்றிய 4 சாயச்சாலைகளுக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Pallipalayam ,Dinakaran ,
× RELATED மண் பரிசோதனை முகாம்