×

கர்ப்பிணிகளுக்கான நிதியுதவி தாமதத்துக்கு ஒன்றிய அரசே காரணம்: சுகாதாரத்துறை விளக்கம்

சென்னை: தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் 5,36,192 கர்ப்பிணிகளுக்கு, மாநில அரசும் தேசிய நலக்குழுமம் பிஐசிஎம்இ-லிருந்து, சென்னையில் உள்ள தேசிய தகவல் மையம் மூலமாக பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தில் ஆன்லைன்-ல் பதிவேற்றம் செய்வதில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக திருப்பி அனுப்பப்பட்டது. குறைகளை களைவதற்காக, முதன்மை செயலர் மருத்துவம் மற்றும் மக்கள் நலத்துறை தலைமையில் உயர் மட்ட குழு அமைக்கப்பட்டு அந்த குழு ஜனவரி 11ம் தேதி, மே 1ம் தேதி ஆகிய தினங்களில் புதுடெல்லி தேசிய தகவல் மையத்திற்கு சென்று, மென்பொருள் பொறியாளர்களுடன் நேரடியாக ஆய்வு கூட்டம் நடத்தி பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் 1.0-ல் உள்ள குறைகளை களைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

திட்டங்களில் செய்யப்பட்ட மாற்றங்கள் காரணமாகவும், மென்பொருள் பதிவேற்றத்தில் ஏற்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து மறு பதிவேற்றத்தில் ஏற்பட்டுள்ள து. ஒன்றிய அரசின் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் 2.0 மென்பொருளில் தமிழக அரசின் பிஐசிஎம்இ 2.0 இணையதளத்திலிருந்து நேரடியாக பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டம் தமிழ்நாடு அரசால் நிறுத்திவைக்கப்படவில்லை. சிறிது காலதாமதம் மட்டுமே ஏற்பட்டுள்ளது.கூடிய விரைவில் நிலுவையில் உள்ள பயனாளிகளுக்கு தங்கு தடையின்றி நிதியுதவி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

The post கர்ப்பிணிகளுக்கான நிதியுதவி தாமதத்துக்கு ஒன்றிய அரசே காரணம்: சுகாதாரத்துறை விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Union government ,Health ,Chennai ,Tamil Nadu Health Department ,Tamil Nadu ,National Welfare Board ,PICME ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...