×

திருக்கழுக்குன்றத்தில்  திரிபுரசுந்தரி அம்மன் தேரோட்டம்


திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் இன்று காலை திரிபுரசுந்தரி அம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். திருக்கழுக்குன்றத்தில் உள்ள பக்தவச்சலேஸ்வரர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள திரிபுரசுந்தரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் 10 நாட்களுக்கு ஆடிப்பூர திருவிழா நடைபெறுவது வழக்கம். இதன்படி, திரிபுரசுந்தரி அம்மன் ஆலயத்தில் கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் ஆடிப்பூர திருவிழா நிகழ்ச்சிகள் துவங்கின. இதைத் தொடர்ந்து, இவ்விழாவின் 7ம் நாளான இன்று காலை திரிபுரசுந்தரியம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி, 4 மாடவீதிகளிலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இத்தேரை ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். மேலும், வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி காட்டி வழிபட்டனர். வழிநெடுகிலும் பக்தர்களுக்கு அன்ன பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

The post திருக்கழுக்குன்றத்தில்  திரிபுரசுந்தரி அம்மன் தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Goddess ,Tripurasundari ,Thirukkalukkunram ,Thirukkalukunram ,Sami ,
× RELATED திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில்...