×

அண்ணாநகரில் பரபரப்பு மெட்ரோ ரயில் நிலையம் அருகே மின்சார பெட்டியில் பயங்கர தீ: பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள சாலையில் வைக்கப்பட்டுள்ள உயரழுத்த மின்சார பெட்டியில் இருந்து இன்று காலை 9.30 மணி அளவில் கரும்புகை வெளியேறிக்கொண்டிருந்தது.  இதுபற்றி அப்பகுதியினர் மின்சார வாரியத்துக்கு தகவல் கொடுத்தனர். இதனிடையே அடுத்தடுத்து இரண்டு பெட்டியில் இருந்து பயங்கரமாக தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியதால் மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டு தவித்தனர். பொதுமக்கள் வந்து தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றபோதும் தீ வேகமாக பரவியது. இதனால் மெட்ரோ ரயிலில் செல்லவந்திருந்த பயணிகளும் பொதுமக்களும் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு நிலவியது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அண்ணாநகர் தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து தீவிரமாக போராடி தீயை அணைத்தனர். இதனால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது; உயரழுத்தம் கொண்ட மின்சார பெட்டிகள் பழுதாகி உள்ளது. அவற்றை உடனடியாக சரிப்படுத்தவில்லையென்றால் தீ விபத்து அடிக்கடி ஏற்படும் ஆபத்துள்ளது. இனிமேலாவது துருப்பிடித்து காணப்படும் உயரழுத்த மின்சார பெட்டிகளை மாற்றியமைக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

The post அண்ணாநகரில் பரபரப்பு மெட்ரோ ரயில் நிலையம் அருகே மின்சார பெட்டியில் பயங்கர தீ: பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Annagar ,Chennai ,Annagar Metro Railway Station ,railway ,Dinakaran ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்