அட என்னப்பா இது ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ் என எங்கு எதில் வீடியோவைத் திறந்தாலும் இந்த மகெபா பாட்டுதான் கேட்குது. என தூக்கத்தில் கூட மண்டைக்குள் மடார் என ஒலிக்கும் பாடலாக டிரெண்டிங்கில் சுற்றிக்கொண்டிருக்கிறது. நம்மூரில் டிக்டாக் தடை என்பதால் இதன் உண்மையான டிரெண்டிங் மூலம் எங்கே எனத் தெரியவில்லை. ஆனால் இதன் வைரல் மோட் அங்கேதான் துவங்கியது.டிக்டாக், மோஜ் என டப்ஷ்மாஷ் ஸ்பெஷலிஸ்ட் செயலிகளில் டிரெண்டாகி, அப்படியே நூல் பிடித்து இன்ஸ்டாகிராம், யூடியூப் என டிரெண்டிங்கில் கொடி கட்டிப் பறக்கிறது. இன்ஸ்டாகிராமில் முதலில் துவங்கியவர் பாடலை பாடிய , மற்றும் பாடலுக்கு சொந்தக் காரரான ஜெயின் தான். யார் இந்த காந்தக் குரல் என தேடியதில் சில தகவல்கள் இதோ.
ஜெயென் லூயிஸ் காலிஸ் (Jeanne Louise Galice) …மேடைப் பெயர் ஜெயின். பிரெஞ்சு பாடகர்-பாடலாசிரியர் மற்றும் இசைக்கலைஞர். 31 வயதான ஜெயின் 2013ம் ஆண்டு தனது இசைப்பயணத்தைத் துவங்கியிருக்கிறார். ஆரம்பத்தில் அமெரிக்க பாப் இசை சமூக வலைத்தளமான ‘மைஸ்பேஸ்’ செயலில் தனது டெமோ டிராக்குகளை வெளியிடத் துவங்கியிருக்கிறார் ஜெயின். தொடர்ந்து ஜெயினின் செயல்பாடுகளை பல பாப் இசை கலைஞர்கள் கவனித்தனர். குறிப்பாக பிரபல பிரெஞ்சு பாடகர், மற்றும் இசைக்கலைஞர் யோடெலிஸ் ஜெயினின் பாடல்களால் ஈர்க்கப்பட்டு அழைக்கப்பட்டார். யோடெலிஸின் உதவியால் இரண்டு ஆல்பங்களான ஜனகா(2015), சோல்ஜர் (2018) வெளியாகின. அவ்வளவுதான் பிரெஞ்சு இசை கடந்து உலகம் முழுக்க பிரபலம் ஆனார் ஜெயின்.
இந்த ஜனகா ஆல்பத்தின் முக்கியப் பாடலாக வெளியான போதே பிரபலமாகி டாப் சார்ட்டில் இடம் பிடித்த பிரெஞ்சுப் பாடல்தான் இந்த ‘மகெபா’ இப்போது இணையத்தில் #Makeba. எப்படி திடீர் டிரெண்ட் எனில் ஜெயின் தனது நேரடி லைவ் கான்செர்ட்டிற்காக இந்தப் பாடலை மீண்டும் புரோமோஷனுக்காகப் பயன்படுத்தி வீடியோக்கள் வெளியிட இதோ ஊரே மகெபா என ஸ்டெப் போட்டு ஆடிக்கொண்டிருக்கிறது. ‘ஒரு லைவ் கான்செர்ட்டிற்காகஇந்தப் பாடலை புரமோஷனாகப் பயன்படுத்தினேன். ஆனால் இந்தளவிற்கு இந்தப் பாடல் திடீர் டிரெண்டிங்கில் வருமென நான் நினைக்கவில்லை’ இப்படி ஆச்சர்யம் தாளாமல் சொல்கிறார் ஜெயின்.
– ஷாலினி நியூட்டன்
The post #Makeba ஜெயின் appeared first on Dinakaran.
