×

காதலியிடம் பேசிய வாலிபர், தந்தைக்கு சரமாரி கத்திவெட்டு

புதுச்சேரி, ஜூலை 19: புதுச்சேரி, லாஸ்பேட்டை, அவ்வை நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (25). இவரும், இவரது தந்தை மாரியப்பனும் மரம் வெட்டும் வேலை செய்து வருகின்றனர். இவரும், உப்பளம், கென்னடி நகரில் வசிக்கும் பெயிண்டர் ஸ்டீபனும் (25) நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இதனிடையே கொட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ரஞ்சித், பைரவன் ஆகியார் மூலமாக முத்தியால்பேட்டையைச் சேர்ந்த ஒரு இளம்பெண் பழக்கமானதாக கூறப்படுகிறது. இதனிடையே அதே பெண்ணுடன், ஸ்டீபன் ஏற்கனவே நெருங்கி பழகி வந்தாராம். சம்பவத்தன்று ரஞ்சித் என்பவரின் தொலைபேசியை வாங்கி ஸ்டீபனின் காதலியுடன் சதீஷ்குமார் பேசியதாக கூறப்படுகிறது. இதுபற்றி இளம்பெண், ஸ்டீபனிடம் தகவல் கூறவே, 17ம்தேதி காலை ஸ்டீபன் மற்றும் அவருடன் வந்த பெயர் தெரியாத நபர் இருவரும் சதீஷ்குமார் வீட்டிற்கு வந்து எப்படி எனது காதலியிடம் நீ பேசலாம் எனக் கேட்டு சதீஷ்குமாரை தலையில் கத்தியால் வெட்டியதாக தெரிகிறது.

இதை தடுத்து அவரது தந்தை மாரியப்பனையும் கத்தியால் வெட்டினாராம். இதையடுத்து கத்தி வெட்டில் படுகாயமடைந்த தந்தை, மகன் இருவரும் உடனே ஜிப்மரில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சதீஷ்குமார் தலையில் 4 தையலும், மாரியப்பன் தலையில் 2 தையலும் போடப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக சதீஷ்குமார் அளித்த புகாரின்பேரில் லாஸ்பேட்டை எஸ்ஐ அனுஷா பாஷா தலைமையிலான போலீசார், ஸ்டீபன் மற்றும் அவரது நண்பர் மீது ஆயுதங்களுடன் தாக்குதல், கொலை மிரட்டல், அசிங்கமாக திட்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் வழக்குபதிந்து தேடி வருகின்றனர்.

The post காதலியிடம் பேசிய வாலிபர், தந்தைக்கு சரமாரி கத்திவெட்டு appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Satish Kumar ,Laspettai ,Mariyappan ,Dinakaran ,
× RELATED நெல்லை அருகே சாலை விபத்தில் 2 இளைஞர்கள் பலி