×

ரூ.17 லட்சம் நவீன இயந்திரங்கள் திருட்டு

 

மதுக்கரை, ஜூலை 19: கோவை மதுக்கரை வி.எஸ்.என். கார்டனை சேர்ந்தவர் அருண்பாபு (39). இவர், சிட்கோ ரயில்வே கேட் அருகே ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 11 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிறுவனத்தில் பலர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 8ம் தேதி சீனாவில் இருந்து பெயிண்ட் ரோலர் மற்றும் வால்வு உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.17 லட்சம். இந்த உபகரணங்கள் 11ம் தேதி திருடுபோனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அருண்பாபு சுந்தராபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

The post ரூ.17 லட்சம் நவீன இயந்திரங்கள் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Madhukarai ,Coimbatore ,Arunbabu ,Garden ,CITCO ,Dinakaran ,
× RELATED மதுக்கரை ஆர்.டி.ஓ.செக்போஸ்ட் அருகே...