×

பாசிப்பயறு விதைப்பண்ணை அமைக்க அறிவுறுத்தல்

 

சிவகங்கை, ஜூலை 19: விதைச்சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குநர் மதுரைச்சாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் அதிகப்படியாக பயறு வகைகளில் உளுந்து மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது துவரை, பாசிப்பயறு தேவை அதிகம் இருப்பதால் குறைந்த வயதுடைய பாசிப்பயறு விதைப்பண்ணை அமைத்தோ அல்லது தானிய பயிராகவோ உற்பத்தி செய்யலாம். கோ 7, கோ 8, வம்பன் 4 ஆகிய ரகங்கள் நல்ல மகசூலை தரும். கோ 8ரகம் ஒரே சமயத்தில் அறுவடைக்கு வரக்கூடியது.

குறைந்த வயதுடையது. ஆடிப்பட்டத்திற்கு ஏற்ற ரகம். மஞ்சள் தேமல் நோய் மற்றும் நுனிகருகல் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. துவரையில் ஊடுபயிர் செய்ய ஏற்றது. ஏக்கருக்கு சராசரியாக 300 கிலோ மகசூல் தரும். 2019ம் ஆண்டு வெளியிடப்பட்ட வம்பன் 4ரகம் 65-70 நாள் வயதுடையது. ஏக்கருக்கு 400 கிலோ மகசூல் தரும். ஏக்கருக்கு 8 கிலோ விதை தேவைப்படும். தரமான சான்று பெற்ற விதைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும். எனவே பாசிப்பயறு விதைப்பண்ணை சாகுபடி செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post பாசிப்பயறு விதைப்பண்ணை அமைக்க அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Assistant Director ,Seed Certification and ,Organic Certification ,Maduraichami ,Dinakaran ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் விவசாய...