×

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பனியன் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

 

திருப்பூர், ஜூலை 19: திருச்சி மாவட்டம், துளியாநத்தம், மங்கலம்புதூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன்(25). இவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தங்கி பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 03.10.2022 அன்று 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரில் தெற்கு மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபாகரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.

இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலு, 14 வயது சிறுமியை அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த பிரபாகரனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.3500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

The post 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பனியன் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Prabhakaran ,Mangalambudur ,Dhuliyanantham, Trichy district ,
× RELATED கடும் வெயிலில் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு குளிர்பானம்