×

இடைநின்ற 5 மாணவர்கள் கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பு

 

சேந்தமங்கலம், ஜூலை 19 : கொல்லிமலை வட்டாரத்தில் பள்ளி செல்லாக் குழந்தைகள், இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் 5 மாணவர்கள் கண்டறியப்பட்டு, மீண்டும் அவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். கொல்லிமலை வட்டார வள மையத்தின் சார்பில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளை கண்டறிய மூன்றடுக்கு குழு அனைத்து பள்ளிகள், வட்டார வளமையம், மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி அளவில் அமைக்கப்பட்ட குழு திண்ணனூர் நாடு ஊராட்சியில் வாசலூர் பட்டி, மூலக்கண்ணிப்பட்டி, சோளக் கண்ணிபட்டி ஆகிய கிராம பகுதிகளில் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். வட்டார கல்வி அலுவலர் பழனிசாமி தலைமையில், வட்டார வளமைய மேற்பார்வையாளர் மனோரஞ்சிதம் முன்னிலையில் ஆசிரியர் பயிற்றுநர்கள் ரமேஷ் குமார், மணிமேகலை, ஜெயலலிதா, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராணி ஆகியோர் அடங்கிய குழுவினர் இப்பணியை மேற்கொண்டனர்.

அப்போது ரிஷ்வந்த் 2ம் வகுப்பு, ஸ்ரீ முருகன் 7ம் வகுப்பு, கௌஷிக் கார்த்திகேயன் 8ம் வகுப்பு ஆகியோர் பள்ளிக்கு செல்லாமல் இடையில் நின்றது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்களது பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கிய அதிகாரிகள், மீண்டும் மாணவர்களை பள்ளியில் சேர்த்தனர். இதேபோல் கொல்லிமலை வட்டார முழுவதும் குழுவினர் நடத்திய பள்ளி செல்லாக் குழந்தைகள் மற்றும் இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுப்பு பணியில் இன்பரசு, பவித்ரா ஆகியோர் கண்டறியப்பட்டு, கா.ஊர்புறம், தெகவாய்ப்பட்டி ஆகிய தொடக்கப் பள்ளிகள் மீண்டும் சேர்க்கப்பட்டனர்.

The post இடைநின்ற 5 மாணவர்கள் கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Kollimalai ,Dinakaran ,
× RELATED சேந்தமங்கலம் நீதிபதி இடமாற்றம்