×

வெண்ணாம்பட்டி எல்லையம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

தர்மபுரி, ஜூலை 19: ஆடி மாத செவ்வாய் கிழமையை முன்னிட்டு, வெண்ணாம்பட்டி எல்லையம்மன் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.தர்மபுரி அடுத்த வெண்ணாம்பட்டி பகுதியில் ஸ்ரீ எல்லையம்மன் கோயிலில் ஆடி மாத செவ்வாய் கிழமையை முன்னிட்டு அதிகாலையில் எல்லையம்மனுக்கு 12 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் நடந்தது. இதையடுத்து எல்லையம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை 10வது வார்டு கவுன்சிலர் மணிவண்ணன், தீபா, ராஜசேகர், புஷ்பாகரன், ராமச்சந்திரன், கோகுல், சூர்யா, கிருஷ்ணன், சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.

The post வெண்ணாம்பட்டி எல்லையம்மன் கோயிலில் சிறப்பு பூஜை appeared first on Dinakaran.

Tags : Vennampatti Behanayamman Temple ,Dharmapuri ,Vennambatti Behanayamman Temple ,Dinakaran ,
× RELATED காயங்களுடன்கிடந்தவர் சாவு