×

வரைபட ஒப்புதல் முதல் கிரகப்பிரவேசம் வரை நிலம் வாங்குவோருக்கு வீடு கட்டவும் உதவி: ஜி ஸ்கொயர் புது திட்டம்

சென்னை: நிலம் வாங்குவோருக்கு அதில் வீடு கட்டுவதற்கு உதவி செய்வதற்கான புதிய திட்டத்தை ஜி ஸ்கொயர் நிறுவனம் அறிவித்துள்ளது. தென்னிந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர், நிலம் வாங்குவோருக்கு, ஜி ஸ்கொயர் கட்டுமான உதவி (ஜி ஸ்கொயர் பில்ட் அசிஸ்ட்) என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் தங்கள் கனவு இல்லத்தை கட்டுவதற்கு தேவையான அனைத்து உதவிகள், ஆலோசனைகளை இந்த திட்டம் மூலம் பெறலாம். கட்டிடத்துக்கான வரைபட ஒப்புதல் பெறுவதில் தொடங்கி, கிரகப்பிரவேசம் வரை அனைத்து வித உதவிகள், சேவைகளை இந்த திட்டம் மூலம் வழங்கப்படும்.

ரியல் எஸ்டேட் துறையின் இந்த புதுமையான திட்டம் குறித்து, ஜி ஸ்கொயர் ரியல்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கூறுகையில், ‘‘ஜி ஸ்கொயர் பில்ட் அசிஸ்ட் திட்டத்தை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். இது நிலம் வாங்கும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களது கனவு இல்லத்தை கட்டுவதற்கான இலக்கை அடைவதற்கு அதிகாரமளிப்பதாக அமையும். இந்த திட்டத்தின் செயல்பாடுகள் அனைத்தையும் வாடிக்கையாளரே முடிவு செய்யலாம். கட்டுமானத்தை அவர்கள் நேரில் பார்வையிடலாம். அவர்களுக்கு நாங்கள் நிபுணர்களின் ஆலோசனைகளை பெற வகை செய்வோம். நிலம் வாங்கியதோடு எங்கள் வாடிக்கையாளர்களுடனான தொடர்ப்பு முடிந்து விடாது’’ என்றார்.

The post வரைபட ஒப்புதல் முதல் கிரகப்பிரவேசம் வரை நிலம் வாங்குவோருக்கு வீடு கட்டவும் உதவி: ஜி ஸ்கொயர் புது திட்டம் appeared first on Dinakaran.

Tags : G Square ,CHENNAI ,South India's… ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...