×

போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.1.50 கோடி நிலம் விற்பனை பெண் கைது

ஆவடி: போலி ஆவணம் தயாரித்து நிலம் விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். ஆவடி அடுத்த அம்பத்தூர் லெனின் நகரை சேர்ந்தவர் ராஜாராம். இவருக்கு, அதே பகுதியில் கள்ளிக்குப்பம், கொரட்டூர் ஆகிய கிராமங்களில் 4800 சதுர அடி நிலம் உள்ளது. இந்த நிலத்தில் நான்கில் ஒரு பகுதியை சில வருடங்களுக்கு முன்பு ராஜாராம் விற்பனை செய்துள்ளார். மீதம் உள்ள இடத்தில் கடந்த மே மாதம் வீடு கட்ட முடிவு செய்துள்ளார். அதற்காக வில்லங்க சான்று போட்டு பார்த்துள்ளார். அப்போது, மீதமுள்ள இடத்துக்கு போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த ராஜாராம், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த மே மாதம் புகார் அளித்தார். புகாரின்படி நில மோசடி தடுப்புப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் தலைமையில் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது போலி ஆவணங்கள் தயாரித்து 3 பேருக்கு நிலங்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அரியலூர் மாவட்டம் சின்னவளையம் கிராமத்தை சேர்ந்த விஜி (44) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.1.50 கோடி நிலம் விற்பனை பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Awadi ,Ambathur Lenin ,Dinakaran ,
× RELATED சென்னை ஆவடியில், மதுபோதையில் காவலரை தாக்க முயன்ற இளைஞர்