×

இலவச ரத்ததான முகாம்

பொன்னேரி: பொன்னேரி நகர பாஜ சார்பில் ரத்ததான முகாம் நேற்று நடந்தது. பிரானதா சக் ஷம், சேவா பாரதி மற்றும் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த முகாமில் பாஜ நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவர்கள் தன்னார்வலர்கள் ரத்ததானம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், பாஜ மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.எம். ஆர்.ஜானகிராமன் துவக்கிவைத்தார். இதில், பொன்னேரி நகரத் தலைவர் சிவகுமார், பாலாஜி, பாஜ மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், மீஞ்சூர் தனியார் பள்ளி தாளாளர் ஸ்ரீராமன், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சேகரிக்கப்பட்ட ரத்தம் எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கபப்ட்டது,

The post இலவச ரத்ததான முகாம் appeared first on Dinakaran.

Tags : blood donation ,camp ,Ponneri ,Ponneri Nagar Baja ,Pranatha Chak Sham ,Seva Bharati ,Free ,Blood Donation Camp ,Dinakaran ,
× RELATED ரத்ததான முகாம்