×

வெற்றிகரமாக 3-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தபட்ட சந்திரயான் -3 விண்கலம்: இஸ்ரோ அறிவிப்பு

ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான் -3 3-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தபட்டுள்ளது. இது பூமிக்கு மிக அருகில் 200 கிலோமீட்டர் மற்றும் பூமியில் இருந்து தொலைவில் 60,000 கி.மீ. தொலைவில் சுற்றுவடபாதை உள்ளது. மேலும் விண்கலம் சீராக உள்ளதகா இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடந்த 14-ந்தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. சந்திரயான்-3 விண்கலம் பூமியை 2 முறை வெற்றிகரமாக சுற்றி வந்துள்ளது. இன்று 3-வது முறையாக பூமியை சுற்றி வருகிறது.

முதல் முறை பூமியை சந்திரயான்-3 விண்கலம் சுற்றும் போது பூமியில் இருந்து அதிகபட்ச தூரத்தை 36 ஆயிரம் கிலோ மீட்டரில் இருந்து 42 ஆயிரம் கிலோ மீட்டராக அதனுடைய சுற்றுப்பாதை உயர்த்தப்பட்டது. 2-வது நாள் சுற்றும்போது பூமியில் இருந்து குறைந்தபட்ச தூரமான 175 கிலோ மீட்டரில் இருந்து 200 கிலோ மீட்டராக சுற்றுப்பாதையை உயர்த்தி உள்ளனர். 3-வது நாளான இன்று பூமியை சுற்றும்போது அதிகபட்ச தூரத்தை 42 ஆயிரத்தில் இருந்து 60 ஆயிரம் கிலோ மீட்டராக அதனுடைய சுற்றுப்பாதையை அதிகரிக்கப்பட்டது.

தற்போது திட்டமிட்டபடி விண்கலம் சீரான நிலையில் இருப்பதாகவும், தேவையான எரிபொருளும் இருப்பதால் நல்ல முறையில் செயல்படுவதை அடுத்து, வருகிற 31-ந்தேதி வரை புவிவட்டப்பாதையை சுற்றி வரும் சந்திரயான்-3 விண்கலம், ஆகஸ்டு 1-ந்தேதி முதல் நிலவை நோக்கி பயணிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து 5-ம் தேதி நிலவு சுற்றுப்பாதைக்கு சந்திரயான்-3 விண்கலம் செல்லவுள்ளது. தொடர்ந்து 23-ந்தேதி வரை நிலவை சுற்றிவரும் விண்கலம், அன்று மாலை 5.47 மணிக்கு நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கவிருப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது.

The post வெற்றிகரமாக 3-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தபட்ட சந்திரயான் -3 விண்கலம்: இஸ்ரோ அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : ISRO ,Srihrikotta ,Earth ,
× RELATED சென்னையை சேர்ந்த ஸ்டார்ட்அப்...