×

பள்ளியில் மழலைகளின் மஞ்சள் பை விழிப்புணர்வு

வத்தலக்குண்டு ஜூலை 18: வத்தலக்குண்டு அன்னை வேளாங்கண்ணி பள்ளியில் மழலையர் வகுப்பு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கலர் தின கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி முதல்வர் பால்ராஜ் தலைமை வகித்தார். பங்குத்தந்தை எட்வர்ட் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பேரூராட்சி தலைவர் சிதம்பரம் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். அனைத்து வண்ணங்களிலும் மாணவர்கள் உடை அணிந்தும், அந்தந்த வண்ணங்களில் உள்ள மலர்கள், பழங்கள், விலங்குகள் போன்று வேடமிட்டும் கலர் தின கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.

குறிப்பாக தமிழக அரசின் மஞ்சள் பை திட்டத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெகிழி பைகளை தவிர்ப்போம் மஞ்சள் பைகளை உபயோகப்படுத்துவோம் என்ற பதாகைகளுடனும், மஞ்சள் பைகளை கையில் ஏந்தியும், மரக்கன்றுகளை கொண்டு வந்தும் பள்ளி குழந்தைகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளி குழந்தை இனியா ஷாம்லி, ‘நான் தமிழக முதல்வரின் பிரதிநிதியாக வந்துள்ளேன், நெகிழி பைகளை பயன்படுத்தாதீர்கள், மஞ்சள் பைகளை மட்டும் பயன்படுத்துங்கள், மரங்களை நடுங்கள், பூமியை பாதுகாப்போம்’ என தனது மழலை குரலில் குரலில் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கலர் தின ஏற்பாடுகளை அருட்சகோதரி கவிதா செய்திருந்தார்.

The post பள்ளியில் மழலைகளின் மஞ்சள் பை விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : bag ,Vatthalakundu ,Day ,Annai Velankanni School ,Dinakaran ,
× RELATED டூவீலர் திருடிய கொத்தனார் கைது