×

ஆன்லைனில் ₹17.50 லட்சம் ேமாசடி இணையவழி மோசடிக்காரர்கள் கைவரிசை

புதுச்சேரி, செப். 25: புதுச்சேரி கலைவாணர் நகரை சேர்ந்தவர் ஆனந்த ராமகிருஷ்ணன். இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு வீட்டில் இருந்தே வேலை செய்வது தொடர்பாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை நம்பி அவர் இணையவழி மோசடிக்காரர்கள் வழிகாட்டுதலின்படி ஆன்லைனில் இவரது டேட்டாவை பதிவு செய்துள்ளார். பிறகு டாஸ்க் விளையாடி சிறிய அளவிலான தொகையை பெற்றுள்ளார். பின்னர் பெரிய அளவில் வருமானம் ஈட்ட ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் முதலீடு செய்து டாஸ்க் விளையாடியுள்ளார். ஆனால் இணையவழி மோசடிக்காரர்கள் இவரது பணத்தை அபேஸ் செய்துகொண்டு இணைப்பை துண்டித்து விட்டனர். இதனால் தான் ஏமாந்ததை உணர்ந்த அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதேபோன்று காரைக்கால் நிரவி பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருக்கு மர்ம நபர்கள் போன் செய்து உங்களுக்கு ஒரு பார்சல் வந்துள்ளது. அதில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் உள்ளது. போதை பொருட்கள் கடத்துகிறீர்களா? என மிரட்டியுள்ளனர். பிறகு மும்பையில் இருந்து போலீஸ் பேசுவதாக கூறி இந்த வழக்கில் இருந்து உங்களை விடுவிக்க வேண்டுமென்றால் பணம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனை நம்பி ரவிச்சந்திரன் அவர்கள் கேட்ட ரூ.15 லட்சத்தை ஆன்லைன் மூலம் அவர்களுக்கு அனுப்பியுள்ளார். இந்த பணத்தை பெற்ற அவர்கள் உடனே இவருடானான இணைப்பை துண்டித்துள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த ரவிச்சந்திரம் தான் ஏமாந்ததை உணர்ந்து புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதேபோல் புதுச்சேரியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் ரூ.30 ஆயிரம் இழந்துள்ளார். புதுச்சேரி ஜீவானந்தபுரத்தை சேர்ந்த மோகன்தாஸ் என்பவர் ஆன்லைனில் வாட்டர் பாட்டில் ஆர்டர் செய்து ரூ.95 ஆயிரம் இழந்துள்ளார். பிறகு பிரவீன் என்பவர் ஜி-பே மூலம் பணம் அனுப்பி ரூ.50 ஆயிரம் இழந்துள்ளார். பியாஷ் என்பவர் பப்ஜி கேம் விளையாட ரூ.4 ஆயிரம் பணம் செலுத்தி ஏமார்ந்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி விசாரணை நடத்தி வருகிறார்.

The post ஆன்லைனில் ₹17.50 லட்சம் ேமாசடி இணையவழி மோசடிக்காரர்கள் கைவரிசை appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Ananda Ramakrishnan ,Kalaivanar Nagar, Puducherry ,WhatsApp ,
× RELATED வீட்டில் தூங்கிய பிரெஞ்சு குடியுரிமை மூதாட்டியை தாக்கி பலாத்காரம்?