- பை-அத்தான்
- மஞ்சப்பாய்
- சென்னை
- தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்
- -அத்தான்
- மஞ்சப்பை பிரச்சாரம்
- மஞ்சப்பை பிரச்சாரம் அத்தான்
- தின மலர்
சென்னை: தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தின் கீழ் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கேரி பேக்குகளை ஒழிக்க பலதரப்பட்ட மக்களைக் கவரும் வகையில் ஆக்கப்பூர்வமான யோசனைகளைக் கண்டறிந்து விலை குறைந்த துணிப் பைகளை உருவாக்குவதற்கான பேக்-அத்தான் (bag-Athon) சவாலை நடத்துகிறது. சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கடினமான மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையில் அதிக சுமைகளைத் தாங்கும் திறன் கொண்ட துணி பைகளை வடிவமைப்பது தான் சவால்.
மேலும் உற்பத்திச் செலவு ரூ.5க்கும் குறைவாக இருக்கும் வெற்றியாளர்கள் உற்சாகமான பணப் பரிசுகளை வெல்லலாம் என மாசுகட்டுப்பட்டு வாரியம் தெரிவித்துள்ளது. வணிக மற்றும் தொடக்க நிலையில் உள்ள நிறுவனங்களின் பங்கேற்பை தமிழ்நாடு அரசு ஊக்குவிக்கிறது. 16-08-2023 முதல் 18-09-2024 வரை பதிவு செய்வதற்கான காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. htps://forms.gle/F1twzrunR9on9f288 என்ற இனையதளம் வாயிலாக பதிவு செய்துகொள்ளலாம்.
The post மஞ்சப்பை பிரச்சாரத்தின் கீழ் விலை குறைந்த துணிப் பைகளை உருவாக்குவதற்கான பேக்-அத்தான் போட்டி appeared first on Dinakaran.