×

கஞ்சா விற்ற வாலிபர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டில், கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில், கஞ்சா விற்பனை செய்வதாக செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அப்பகுதிகளில் நேற்று முன்தினம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, செங்கல்பட்டு புறவழிசாலை பழவேலி பகுதியில், கஞ்சா விற்பனை செய்து வந்த வாலிபரை மடக்கி, பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

அதில், அவர் பழவேலி பகுதியை சேர்ந்த விக்கி (29) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அப்பகுதியில் உள்ள சிறையில் அடைத்தனர். ஏற்கனவே, கஞ்சா விற்ற வழக்கில் விக்கி கைதானது குறிப்பிடதக்கது.

The post கஞ்சா விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Walier ,Chengalpadu ,Chengalputt ,brinkalpattu ,
× RELATED செங்கல்பட்டு அருகே கார் உதிரி பாக தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து