×

கலைஞர் நூற்றாண்டு விழா கண்ணம்பாளையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

 

சூலூர்,ஜூலை17: கோவை தெற்கு மாவட்ட திமுக மற்றும் கண்ணம்பாளையம் திமுக பேரூர் கழகம் இணைந்து நடத்தும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று மாலை 5.30 மணி அளவில் கண்ணம்பாளையம் கே.ஆர். மணி நினைவு மேடை வே.ரா.கு.செங்குட்டுவன் நினைவுத்திடலில் சிறப்பாக நடைபெற உள்ளது. கண்ணம்பாளையம் நகர செயலாளர் விஸ்வநாதன் வரவேற்று பேசுகிறார்.கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமை தாங்குகிறார்.விழாவில் தமிழ்நாடு வீட்டு வசதி நகர்புற வளர்ச்சி துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு. முத்துசாமி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார்.

விழாவில் கோவை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட மாநில நிர்வாகிகள்,மாவட்ட நிர்வாகிகள்,தலைமை செயற்குழு உறுப்பினர்கள்,பொதுக்குழு உறுப்பினர்கள்,ஒன்றிய,நகர,பேரூர்,பகுதி கழக செயலாளர்,நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள்,ஊராட்சி தலைவர்கள்,கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி,தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், மற்றும் கழகத் தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.கழக துணை செயலாளர் பசுபதி நன்றி கூற உள்ளார். நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில். பொதுமக்கள் மற்றும் திமுக வினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர். தளபதி முருகேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

The post கலைஞர் நூற்றாண்டு விழா கண்ணம்பாளையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா appeared first on Dinakaran.

Tags : Kannampalayam ,Sulur ,Coimbatore South District DMK ,DMK ,Parur ,Kazhagam ,Muthamith Scholar ,
× RELATED சூலூரில் போக்சோ வழக்கில் இருவர் கைது