×

கல்லல், இளையான்குடியில் நாளை மின் நிறுத்தம்

 

காரைக்குடி, ஜூலை 17: காரைக்குடி அருகே கல்லல் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளது. இதனால் அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கல்லல், சிறுவயல், ஆலம்பட்டு, குருந்தம்பட்டு, வெற்றியூர், மாலைகண்டான், சாத்தரசம்பட்டி, கவுரிப்பட்டி, பாகனேரி, பனங்குடி, நடராஜபுரம், கண்டியூர், செம்பனூர், செவரக்கோட்டை, பெரியசேவப்பட்டு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் லதாதேவி தெரிவித்துள்ளார்.

இளையான்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், இளையான்குடி மற்றும் புதூர், கண்ணமங்கலம், தாயமங்கலம், சோதுகுடி, கருஞ்சுத்தி, நகரகுடி, ஆழிமதுரை, முனைவென்றி மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு, நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் ஜான்சன், தெரிவித்தார்.

The post கல்லல், இளையான்குடியில் நாளை மின் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Stoneware ,Yelayankudi ,Karaikudi ,Kallal ,Stoll ,Yonkudi ,Dinakaran ,
× RELATED அணைவதற்கு முன் விளக்கு...