×

வேளாண் துறை உழவர் திருவிழா

தர்மபுரி, ஜூலை 16: பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரம், போதக்காடு கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் உழவர் திருவிழா நடைபெற்றது. விழாவுக்கு தர்மபுரி வேளாண்மை இணை இயக்குனர் விஜயா தலைமை தாங்கி பேசியதாவது: சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு 2023ஐ முன்னிட்டு, அனைத்து கிராமங்களிலும் சிறுதானியங்களான சாமை, வரகு குதிரை வாலி, ராகி, பனி வரகு, திணை ஆகியவற்றை சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும். உழவன் செயலி மூலம் விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருட்களை பெற முன்பதிவு செய்வது அவசியம். பிரதம மந்திரி கௌரவ நிதிஉதவி பெற, இகேஒய்சி மற்றும் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்றார்.

விதைச்சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குனர் ஜெயமாலா, வட்டார வேளாண் உதவி இயக்குனர் முனிகிருஷ்ணன், தர்மபுரி மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் செல்வம், உதவி வேளாண் அலுவலர் திருநாவுக்கரசு, பஞ்சாயத்து தலைவர் பூங்கொடி, ஒன்றிய கவுன்சிலர் கண்ணன், முன்னோடி இயற்கை விவசாயி சாமிகண்ணு, இயற்கை வேளாண்மை பயிற்றுனர் பெருமாள், ஆத்மா திட்ட தலைவர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். துணை வேளாண் அலுவலர் ஆறுமுகம் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சரவணன் மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் சண்முகம், மனோஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

The post வேளாண் துறை உழவர் திருவிழா appeared first on Dinakaran.

Tags : Agriculture Department Farmers Festival ,Dharmapuri ,Podhakadu ,Pappirettipatti ,
× RELATED வாகன புகை பரிசோதனை மையங்கள் புதிய செயலியை நிறுவ வேண்டும்