×

புது நெல்லு.. புது நாத்து… சுமைதூக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி 3-வது நாளாக வேலை நிறுத்தம் ரூ.300 கோடி சரக்கு தேக்கம்

ஈரோடு, ஜூலை 16: ஈரோட்டில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி 3வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகினற்னர். இதனால், ஈரோடு மாநகரில் ரூ.300 கோடிக்கு மேல் சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளது. ஈரோட்டில் மாநகரில் 450க்கும் மேற்பட்ட பெரிய, சிறிய லாரி பார்சல் புக்கிங் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இங்கிருந்து தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு ஜவுளி, மஞ்சள், விளை பொருட்கள், மாட்டு தீவனம், பேப்பர், அட்டை, போர்டு உட்பட பல்வேறு பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. சுமை தூக்கும் பணியில் 7,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேசன் உடன் அனைத்து தொழிற்சங்கங்கள் ஒப்பந்தம் செய்து 3 ஆண்டுக்கு ஒரு முறை கூலி உயர்வு வழங்கப்படும்.

ஆனால், கடந்த 6 ஆண்டாக கூலி உயர்த்தப்படவில்லை. இதனால், 41 சதவீத கூலி உயர்வு, இரவு 8 மணிக்கு மேல் லோடு ஏற்ற இரவு சாப்பாட்டுக்கு 75 ரூபாய் உள்ளிட்ட சலுகைகள் வழங்கவும், அதற்கான ஒப்பந்தம் செய்யவும் கோரி ஈரோடு மாவட்ட அனைத்து சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தினர் கடந்த 13ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு பார்க் சாலையில் தொடர்ந்து 3வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த 3 நாள் போராட்டத்தின் காரணமாக ஈரோட்டில் இருந்து பிற நகரங்களுக்கு பொருட்களை கொண்டு செல்ல முடியாலும், ஈரோட்டிற்கு வந்த சரக்குகளை டெலிவரி செய்ய முடியாமல் சுமார் ரூ.300 கோடி அளவுக்கு பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளது. சில இடங்களில் லாரிகளில் வந்த சரக்குகள் இறக்காமல் லாரிகளிலேயே தேங்கி கிடப்பதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

The post புது நெல்லு.. புது நாத்து… சுமைதூக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி 3-வது நாளாக வேலை நிறுத்தம் ரூ.300 கோடி சரக்கு தேக்கம் appeared first on Dinakaran.

Tags : Pudu Nellu ,Pudu Nathu ,Erode ,Pudu ,Nellu ,Dinakaran ,
× RELATED கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த...