×

எனக்கு குழந்தை பிறந்ததை விட நாட்டுக்காக விளையாடுகிறேன் என்பதே பெருமை: இந்திய வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் நெகிழ்ச்சி..!!

சேலம்: ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது, இந்திய அணி கேப்டன் விராட் கோலி, எம்.எஸ்.தோனி உள்ளிட்டோர் நன்கு ஊக்கமளிப்பதாக சொந்த ஊரான சேலம் சின்னப்பம்பட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் நெகிழ்ச்சியுடன் பேட்டியளித்துள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விக்கெட் எடுத்தது கனவு போல் இருந்தது. மேலும், இத்தகைய முயற்சிக்கு சகவீரர்கள், பயிற்சியாளர்கள் மிகுந்த ஆதரவு அளித்தனர். ஆஸ்திரேலியாவில் திடீரென கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கடின உழைப்பு இருந்தால் அந்த உழைப்பே ஒருவரை மேலே கொண்டு செல்லும்.  இதனையடுத்து, அவர் கூறியதாவது: என்னை விளையாட்டில் சேர்த்துள்ளதாக தெரிவித்தவுடன் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தேன். ஆனால், ஒருநாள் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. ஐ.பி.எல்.லில் விளையாடிய அனுபவம் எனக்கு ஆஸ்திரேலிய பயணத்தில் பேருதவியாக அமைந்தது. மேலும், எனக்கு குழந்தை பிறந்ததை விட நாட்டுக்காக விளையாடுகிறேன் என்பது பெருமையாக இருந்தது. இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை எனக்கு சிறுவயதில் இருந்தே பிடிக்கும். கடின உழைப்பிற்கு சிறந்த உதாரணம் நான். இந்திய அணி கேப்டன் விராட் கோலி, எம்.எஸ்.தோனி உள்ளிட்டோர் நன்கு ஊக்கமளித்தனர். மேலும், மீம்ஸ்கள் மூலம் எனக்கு பேராதரவு தெரிவித்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் வீட்டுப் பிள்ளையாக பார்க்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என தெரிவித்துள்ளார்….

The post எனக்கு குழந்தை பிறந்ததை விட நாட்டுக்காக விளையாடுகிறேன் என்பதே பெருமை: இந்திய வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் நெகிழ்ச்சி..!! appeared first on Dinakaran.

Tags : Natarajan ,Salem ,Wirad Kohli ,M. S.S. Thoni Intours ,Dinakaran ,
× RELATED தொழிலாளி வீட்டை சூறையாடிய கார் டிரைவர் கைது