×

சுல்தான்பேட்டையில் விவசாயிகள் கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம்

 

சூலூர், ஜூலை 15 சூலூர், சுல்தான்பேட்டை அடுத்துள்ள பச்சார்பாளையத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக விற்பனை செய்ய வேண்டும், கொப்பரைக்கு உரிய விலை கொடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரிந்த பொராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜூலை 5ம் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் நேற்று கண்களில் கருப்புத்துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில பெண்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post சுல்தான்பேட்டையில் விவசாயிகள் கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Sultanpet ,Sulur ,Bacharpalayam ,Tamil Nadu ,
× RELATED பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் அரசு...