- ஆனி பிரமோத்சவம்
- சுவாமி மாதா
- வேதி உல
- திருவண்ணாமலை அண்ணாமலை கோயில்
- திருவண்ணாமலை
- ஆனி புரோத்சவ விழா
- சுவாமி
திருவண்ணாமலை, ஜூலை 15: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆனி பிரமோற்சவ விழாவின் 7ம் நாளான நேற்று அலங்கார ரூபத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் விழாக்களில், தனிச்சிறப்புக்குரியது ஆனி பிரமோற்சவ விழா. தட்சணாயண புண்ணியகாலம் என அழைக்கப்படும் ஆனி பிரமோற்சவ விழா கடந்த 8ம் தேதி நேற்று விமரிசையாக தொடங்கியது. அப்போது, அலங்கார ரூபத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கொடிமரம் அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், வெள்ளி கவச அலங்காரத்தில் விநாயகர், பராசக்தி அம்மன் ஆகியோரும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அதைத்தொடர்ந்து, தினமும் மாட வீதியில் காலை மற்றும் இரவில் சுவாமி திருவீதியுலா நடைபெற்று வருகிறது. அதன்படி, விழாவின் 7ம் நாளான நேற்று அலங்கார ரூபத்தில் விநாயகர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் மற்றும் பராசக்தி அம்மன் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் ஆனி பிரமோற்சவ விழா நாளை மறுதினம் நிறைவடைகிறது.
The post ஆனி பிரமோற்சவம் 7ம் நாள் விழா சுவாமி மாட வீதி உலா நடந்தது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் appeared first on Dinakaran.