×

ஜெர்சி நகரத்தின் பூங்காவில் நிறுவப்பட புதுவையில் உருவான 7 அடி பிரமாண்ட திருவள்ளுவர் சிலை

புதுச்சேரி, ஜூலை 15: பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரான்சின் ஜெர்சி நகரத்தில் உள்ள மைய பூங்கா வளாகத்தில் பிரான்ஸ் அரசு அனுமதியுடன் தமிழ்ச்சங்கம் சார்பில் திருவள்ளுவர் சிலை நிறுப்படவுள்ளது. இதற்கான சிலையை செய்வதற்கு பிரான்ஸ் தமிழ்ச்சங்கம் புதுவையில் உள்ள பத்ம விருது பெற்ற சிற்ப கலைஞர் முனுசாமியிடம் கடந்த 7 மாதங்களுக்கு முன் ஆர்டர் கொடுத்தது. அதன்பிறகு அவர் வில்லியனூர், ஒதியம்பட்டு பகுதியில் காசிவிஸ்வநாதர் கோயில் அருகே 7 அடி உயரமுள்ள 600 கிலோ எடை கொண்ட திருவள்ளுவர் சிலையை 70 சதவீதம் காப்பர், 28 சதவீதம் சிங்க், 2 சதவீதம் ஈயம் ஆகியவற்றை கொண்டு வெண்கல உலோகத்தால் பிரமாண்டமாக உருவாக்கினார். அதன்பின்னர் அவற்றை கடந்த மார்ச் மாதம் விமானம் மூலம் பிரான்ஸ் நாட்டுக்கு ஏற்றுமதி செய்துள்ளார்.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள இந்திய வம்சாவளி சமூகத்தினரிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். இதனையடுத்து பிரான்ஸ் தமிழ்ச்சங்கம் சார்பில் நிறுவப்படவுள்ள திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டார். இச்சிலை திறப்பு விழாவையொட்டி திருவள்ளுவர் மாநாடு நடத்தப்படவுள்ளது. சிலை அனைவரையும் கவரும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளதால் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் இதனை பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கின்றனர். பிரான்ஸ் நாட்டில் புதுவையில் இருந்து திருவள்ளுவர் சிலை கொண்டு செல்லப்பட்டு நிறுவப்படவுள்ள சம்பவம் புதுவை மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post ஜெர்சி நகரத்தின் பூங்காவில் நிறுவப்பட புதுவையில் உருவான 7 அடி பிரமாண்ட திருவள்ளுவர் சிலை appeared first on Dinakaran.

Tags : Thiruvalluvar ,Puduvai ,Jersey City ,Puducherry ,French government ,Jersey City, France ,
× RELATED காவி உடையில் திருவள்ளுவர்: ஆளுநருக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்